சூப்பர்மேனாக பறந்து பவுண்டரியில் வித்தை காட்டிய விராட் கோலி: வைரல் வீடியோ
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பவுண்டரி எல்லைக்கு அருகே விராட் கோலி பந்தை திறமையாக தடுத்து நிறுத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெற்றி பெற்ற இந்தியா
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது டி20 போட்டி பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 69 பந்துகளில் 8 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 121 ஓட்டங்கள் விளாசினார். இதன் மூலம் இந்தியா 213 ஓட்டங்களை ஆப்கானிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்தது.
BCCI
கடினமான இலக்காக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணி விடா முயற்சியுடன் போராடி 20 ஓவர்கள் முடிவில் 212 ஓட்டங்கள் குவித்து போட்டியை சமன் செய்தது.
ஆனால் இதையடுத்து நடைபெற்ற அடுத்தடுத்த சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
புலியாய் பாய்ந்த விராட் கோலி
விறுவிறுப்பு பஞ்சம் இல்லாமல் இரு அணி வீரர்களும் தங்கள் திறமையை வெளிகாட்டிய நிலையில், 3வது டி20 போட்டி கடும் சுவாரஸ்யமாக இருந்தது.
இந்த போட்டியில் சிக்சருக்கு அடிக்கப்பட்ட பந்தை விராட் கோலி மட்டும் தடுத்து நிறுத்தாவிட்டால் இதில் இந்திய அணி தோல்வியை கூட தழுவி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Excellent effort near the ropes!
— BCCI (@BCCI) January 17, 2024
How's that for a save from Virat Kohli ??
Follow the Match ▶️ https://t.co/oJkETwOHlL#TeamIndia | #INDvAFG | @imVkohli | @IDFCFIRSTBank pic.twitter.com/0AdFb1pnL4
இலக்கை அடையும் நோக்கத்துடன் அதிரடியாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடி வந்த போது, 16.4 ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். 9 பந்துகளில் 22 ஓட்டங்கள் குவித்து அதிரடியாக விளையாடி வந்த குல்பாடின் நைப்(Gulbadin Naib) பந்தை சிக்சர் எல்லைக்கு தூக்கி அடித்தார்.
அப்போது சிக்சர் எல்லைக்கு அருகில் நின்ற விராட் கோலி பந்தின் வேகத்தையும், கோணத்தையும் சரியாக அளந்து துள்ளிக் குதித்து பந்தை தடுத்து நிறுத்தினார்.
இந்நிலையில் விராட் கோலி சூப்பர் மேன் போல் பறந்து தடுத்து நிறுத்திய அந்த பந்து 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்து இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் விராட் கோலி புலியை போல பாய்ந்து பந்தை தடுத்த வீடியோ இணைய தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |