சச்சினை கண்முன் நிறுத்திய விராட் கோலி: மைதானத்தில் பறந்த சிக்ஸரில் அசந்து போன ரசிகர்கள்
44 பந்துகளில் 64 ஓட்டங்களை குவித்து இந்திய அணியை தாங்கி பிடித்தார் விராட் கோலி.
சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்தும் விதமாக சிக்ஸர் ஒன்றை கோலி விளாசினார்.
விராட் கோலி அடித்த சிக்ஸர் ஒன்று 1998ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்துவதாக உள்ளது என போட்டி வர்ணனையாளர்கள் வியப்படைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் வைத்து தொடங்கிய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.
போட்டியின் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா சொற்ப ஓட்டங்களில் முதலிலேயே வெளியேற, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மலமலவென உயர்த்தினார்கள்.
Virat+Straight Drives=??? #ViratKohli? pic.twitter.com/fycTxrZw3A
— Hyderabad Hawaaa (@tweetsraww) November 2, 2022
அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த கே.எல். ராகுல் 32 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 30 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் போல்டானார்.
இவ்வாறு அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஒருபுறம் தங்கள் விக்கெட்டுகளை இழந்து திரும்பினாலும் மறுபுறம் விராட் கோலி பாதுகாப்பாகவும், விறுவிறுப்பாகவும் ரன்களை குவித்து கொண்டிருந்தார்.
அப்போது தான் ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் வியப்படையும் வண்ணம் சச்சின் டெண்டுல்கர் பாணியில் ஸ்ட்ரெய்ட் திரையில் சிக்ஸர் ஒன்றை விராட் கோலி விளாசினார்.
ஹசன் மஹ்மூத் வீசிய 19-ஆவது ஓவரின் கடைசி பந்தை விராட் கோலி முன் நகர்ந்து வந்து ஸ்ட்ரெய்ட் திரையில் விராட் கோலி விளாசிய சிக்ஸர் ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்களை வியப்படைய வைத்தது.
கூடுதல் செய்திகளுக்கு: துருக்கியில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: வெளியாகியுள்ள நல்ல செய்தி
இந்த சிக்ஸரை கண்ட போட்டியின் வர்ணனையாளர்கள் 1998-ஆம் ஆண்டு சார்ஜா போட்டியில் டெண்டுல்கரை நினைவுபடுத்துவதாக இருந்தது என தெரிவித்து வியப்படைந்தனர்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 44 பந்துகளில் 64 ஓட்டங்களை எடுத்திருந்தார், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்கள் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.