என் வேலை முடிந்துவிட்டது: விராட் கோலி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற பின்னர் தனது வேலை முடிந்துவிட்டதாக விராட் கோலி ட்வீட் செய்துள்ளார்.
ஐபிஎல்-லில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
கடந்த மூன்று போட்டிகளில் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வந்த விராட் கோலி, நேற்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் எடுத்தார். கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் RCB அணி சிறப்பாக விளையாடியதை குறிக்கும் வகையில் சில புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கோலி, தனது வேலை முடிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
Job done. ✌️@RCBTweets pic.twitter.com/74HqNEF3S6
— Virat Kohli (@imVkohli) April 9, 2022