நீயும் என் மகன்தான்ப்பா- கோலியை கட்டியணைத்து முத்தமிட்ட ஜோஷ்வாவின் தாய்!
விராட் கோலியை கட்டியணைத்து முத்தமிட்ட வெ.இ வீரர் ஜோஷ்வாவின் தாயின் நெகிழ்ச்சி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகனாக மாறிய ஜோஷ்வா
நேற்று முந்தைய ஆட்டத்தின்போது, விராட் கோலி துடுப்பாட்டத்தில், 70 ஓட்டங்களை கடந்து ஆடிக்கொண்டிருந்த போது, அவரிடம் வெ.இ வீரர் ஜோஷ்வா சில்வா, "சதத்தை விளாசி விடுங்கள்" என்று கூறினார்.
அப்போது, விராட் கோலி நான் சதத்தை அடிப்பதற்கு என்னை விட நீங்கள் தான் ஆர்வமாக இருக்கிறீர்கள் போல... என்று சிரித்துக் கொண்டு பேசினார்.
அதற்கு ஜோஷ்வா சார்... எனக்கு நல்லா தெரியும். நீங்கள் சதம் விளாசிடுவீங்க என்றார். இந்த உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதன் பிறகு, உங்கள் ஆட்டத்தைப் பார்க்க என் தாய் எனக்கு போன் செய்து மைதானத்திற்கு வருவதாக கூறியிருக்கிறார் என்று ஜோஷ்வா தெரிவித்திருந்த நிலையில், விராட் கோலியின் ஆட்டத்தைப் பார்க்க வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வாவின் தாய் ட்ரினிடாட் மைதானத்திற்கு வந்தார். 2ம் நாள் ஆட்டத்திற்கு பிறகு, விராட் கோலியை சந்திப்பதற்காக ஜோஷ்வாவும், அவரது தாயும் காத்துக்கொண்டிருந்தார்கள்.
விராட் கோலியை கட்டியணைத்த தாய்
இதை அறிந்த விராட் கோலி உடனே அவர்களை சந்தித்தார். அப்போது, விராட் கோலியை பார்த்த சந்தோஷத்தில் ஜோஷ்வாவின் தாய் கட்டியணைத்து விராட் கோலிக்கு முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினார்.
ஜோஷ்வா புகைப்படம் எடுக்க, இருவரும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்கள். அப்போது, ஜோஷ்வாவின் தாய் விராட் கோலியைப் பார்த்து ஆனந்த கண்ணீர் சிந்தினார். இச்சம்பவம் சுற்றியிருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து ஜோஷ்வாவின் தாய் பேசுகையில்,
நானும், என் மகனும் விராட் கோலியின் தீவிர ரசிகர்கள். விராட் கோலி சிறந்த துடுப்பாட்டக்காரர். எங்கள் மண்ணில் அவர் விளையாடுவது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவருடன் ஜோஷ்வா களத்தில் விளையாடுவதைப் பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. அவரிடமிருந்து ஜோஷ்வா நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The moment Joshua Da Silva's mother met Virat Kohli. She hugged and kissed Virat and got emotional. (Vimal Kumar YT).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 22, 2023
- A beautiful moment! pic.twitter.com/Rn011L1ZXc
Virat Kohli is once in a life time sportsperson.
— Johns. (@CricCrazyJohns) July 22, 2023
The respect, he has earned over a decade, What a beautiful video. pic.twitter.com/bDhizasC6U
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |