சிம்புவின் 'நீ சிங்கம் தான்' பாடலை விரும்பும் விராட் கோலி! இணையத்தில் வைரலாகும் வீடியோ
சிம்புவின் 'நீ சிங்கம் தான்' பாடல் தனது சமீபத்திய விருப்பமான பாடல் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் விருப்பமான பாடல்
நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், விராட் கோலி தனது சமீபத்திய இசை விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'பத்து தல' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நீ சிங்கம் தான்' பாடல் தனக்குப் மிகவும் பிடித்தமான பாடல் என்று அவர் கூறியுள்ளார்.
Nee singam dhan @imVkohli ❤️🔥🦁 https://t.co/qVwdmnLusi
— Silambarasan TR (@SilambarasanTR_) May 1, 2025
சமீபத்திய பேட்டி ஒன்றில் விராட் கோலி தனது எதிர்பாராத இசை விருப்பத்தைப் பகிர்ந்துகொண்டார். அதில் "தற்போது எனக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்றால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், அது 'நீ சிங்கம் தான்' பாடல் தான்" என்று அவர் தெரிவித்தார்.
விராட் கோலியின் இந்த கருத்தைக் ஆர்சிபி அணி தங்களது எக்ஸ் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி, ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |