வங்கதேச போராட்டத்தில் விராட் கோலி? வீடியோ வைரல்!
வங்கதேசத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தால் நாடு முழுவதும் கொந்தளிப்பு நிலவி வருகிறது.
பல வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் இல்லத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் உடைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை சூறையாடினர். போராட்டம் இன்னும் நடந்து வருகிறது.
இந்த எதிர்ப்புக்கு மத்தியில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை போன்று தோற்றமளிக்கும் இளைஞர் ஒருவர் போராட்ட களத்தில் காணப்பட்டுள்ளார். அவரது வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) தொப்பியை அணிந்துகொண்டு, ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் (Awami League) கட்சிக்கு எதிராக அவர் போராட்டத்தின் நடுவில் நின்று கோஷம் எழுப்புகிறார், இப்போது அவர் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
🚨King Kohli joins the victory celebration at the streets of Chattogram, #Bangladesh pic.twitter.com/zxl5opkbEq
— Zeyy (@zeyroxxie) August 5, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Virat Kohli, Bangladesh, RCB, Bangladesh protest