பேட் எப்படி பிடிக்க வேண்டும் என சொல்லித் தருகிறேன்: ஜோகோவிச்சை கலாய்த்த விராட் கோலி
டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை பார்த்து விராட் கோலி கிண்டல் செய்து கலாய்த்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடிய ஜோகோவிச்
2024ம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று ஜனவரி 14ம் திகதி தொடங்கி ஜனவரி 28ம் திகதி முடிவடைகிறது.
இந்த போட்டியில் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
Game respects game!
— #AusOpen (@AustralianOpen) January 11, 2024
(And Novak is just like the rest of us when it comes to Smudge...)@stevesmith49 • @DjokerNole • #AusOpen • #AO2024 pic.twitter.com/ioL8hjVSrF
இதனை தொடர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்த டென்னிஸ் கோர்ட்டில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் உடன் கிரிக்கெட் விளையாடினார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதோடு, இதனை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினும் தன்னுடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்தார்.
கலாய்த்த விராட் கோலி
இந்நிலையில் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் பேட்டிங் செய்த முறையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிண்டலடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமீபத்தில் ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பார்த்தேன், அதில் அவர் பேட்டை பிடித்திருப்பதை பார்த்தப்போது அதனை சரி செய்ய வேண்டும் என்று தோன்றியது.
டென்னிஸ் எவ்வளவு வேகமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும், அவருடன் நான் டென்னிஸ் விளையாடினால் சிறப்பாக இருக்கும்.
அதே நேரம் அவருக்கு கிரிக்கெட் பேட்டை எப்படி பிடிக்க வேண்டும் என்று நான் சொல்லித்தர முடியும் என்றும் தன்னுடைய புதிய நண்பர் ஜோகோவிச்சை விராட் கோலி கலாய்த்துள்ளார்.
உயிரிழந்தவர் திரும்பி வந்தால் அதிர்ச்சி: குடும்பத்தினருக்கு சாம்பல் கலசம், இறப்பு சான்றிதழ் அதிகாரிகள்
சமீபத்தில் சோனி ஸ்போர்ட்ஸ் நேர்காணலில் பேசிய ஜோகோவிச், நானும் விராட் கோலியும் சில வருடங்களாக குறுஞ்செய்தி வழியாக பேசி வருகிறோம், அவரை சந்தித்து பேசுவது எனக்கு கிடைத்த கெளரவம் மற்றும் பாக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |