ஜாம்பவான் சங்ககாராவின் இமாலய சாதனையை முறியடித்த கோஹ்லி
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில், விராட் கோஹ்லி இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காராவை முந்தினார்.
கோஹ்லி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா துடுப்பாடி வருகிறது.
BCCI/X
இப்போட்டியில் விராட் கோஹ்லி 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அவரது 77வது ஒருநாள் அரைசதம் ஆகும்.
மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ஓட்டங்களை தாண்டினார். இதன்மூலம் அவர் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாராவை முந்தினார்.
முதலிடத்தில் சச்சின்
குமார் சங்ககாரா (Kumar Sangakkara) 28,016 ஓட்டங்கள் குவித்த நிலையில், கோஹ்லி அவரை தாண்டியுள்ளார். அவரது ஸ்கோரில் 84 சதங்கள், 145 அரைசதங்கள் அடங்கும்.
AP
ஒட்டுமொத்த அரங்கில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்த இடங்களில் கோஹ்லி, சங்ககாரா, பாண்டிங், ஜெயவர்த்தனே ஆகியோர் உள்ளனர்.
BCCI/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |