விராட் கோலியின் உணவகத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பு! எழுந்துள்ள கடும் கண்டனம்
விராட் கோலியின் ஒன்8 கம்யூன் என்ற சங்கிலித் தொடர் உணவகங்களில் ஓரினச்சேரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்8கம்யூன் என்பது சங்கிலித் தொடர் உணவகங்கள் ஆகும். இதில் புனே கிளையில் ஓர் பாலினச் சேர்க்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கபப்ட்டதாக அந்த அமைப்பினர் இன்ஸ்டாகிராமில் பெரிய பதிவு ஒன்றை இட, அவர்களுக்கு ஆதரவாக கோலி உணவக நிர்வாகத்துக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
உங்கள் உணவகங்களில் பாகுபாடு கடைப்பிடிக்கின்றன. விராட் கோலி, ஆனால் இது உங்களுக்குத் தெரியாமல் கூட இருக்கலாம், ஆனால் ஒரு பிரிவினருக்கு இடையே இத்தகையை பாகுபாடு ஏற்றுக் கொள்ள முடியாதது.
உங்கள் உணவகங்களில் மற்ற இடங்களிலும் இதே பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. நீங்கள் உடனடியாக இதை மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
விராட் கோலிக்குச் சொந்தமான ஒன்8 கம்யூன் சங்கிலித் தொடர் உணவகங்களின் புனே கிளை ஓர் பாலினச் சேர்க்கையாளர்கள் ஆண் அல்லது பெண் இருதரப்பினருக்குமே மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் ஆண்/பெண் உறவு என்ற இயற்கை உறவுகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறுவதாக இந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பதில் அளித்த விராட் கோலி உணவக நிர்வாகம், நாங்கள் பாலின பேதம் பாராட்டவில்லை. மாறாக, தனிப்பட்ட பையன்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்றுதான் கூறியுள்ளோம்.
இது எதனால் எனில் வளாகத்தில் உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதே தவிர பாலின பேதமெல்லாம் இல்லை என்று தெரிவித்துள்ளது.