224 போட்டிகளில் 12,662 ஓட்டங்கள்! ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி
அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
கோலியின் அதிரடி சதம்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
BELIEVE! 🇮🇳#TeamIndia #INDvNZ #3rdODI @IDFCfirstbank pic.twitter.com/iDhHO2Bg7z
— BCCI (@BCCI) January 18, 2026
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது.
நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல்(137), கிளென் பிலிப்ஸ்(106)ஆகியோர் சதமடித்து மிரட்டினர்.
இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ஓட்டங்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் ஒற்றை ஆளாக போராடிய விராட் கோலி 108 பந்துகளில் 124 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
பாண்டிங் சாதனையை முறியடித்த கோலி
இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் 3 வது வீரராக களமிறங்கிய அதிக ஓட்டங்கள் விளாசிய வீரராக விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

330 போட்டிகளில் 12,655 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்த அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
விராட் கோலி 224 போட்டிகளில் விளையாடி 12,662 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து, சங்ககாரா 238 போட்டிகளில் 9747 ஓட்டங்களும், காலிஸ் 200 போட்டிகளில் 7774 ஓட்டங்கள் குவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |