தன்னை பெற்றெடுத்த அம்மாவுக்கு வாழ்த்து கூறிய விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் அவ்வப்போது ட்விட்டரில் பதிவிடுவதை விராட் கோலி வாடிக்கையாக வைத்துள்ளார்.
இன்று உலகின் பல நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விராட் கோலியும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அனைத்து தாய்மார்களுக்கும் எனது அன்பையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பலம் நிகரற்றது மற்றும் என்னுடைய மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார்.
A lot of love and happiness to all mother's. Your strength is unmatched and here's wishing you a very Happy Mother's Day. ?
— Virat Kohli (@imVkohli) May 8, 2022
இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் விராட் கோலியின் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.