மாம்பழங்கள் மூலம் நவீன் உல் ஹக்கை பங்கமாய் கலாய்த்த மும்பை வீரர்கள் - நடந்தது என்ன?
மாம்பழங்களை வைத்து லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கை மும்பை வீரர்கள் பங்கமாய் கலாய்த்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சர்ச்சையில் சிக்கிய நவீன் உல் ஹக்
ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை நெறுங்கியுள்ளது, மும்பை அணியிடம் தோல்வி அடைந்த லக்னோ அணியையும், வீரர் நவீன் உல் ஹக்கையும் மாம்பழங்களால் மும்பை வீரர்கள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.
சமீபத்தில் லக்னோ அணியும், பெங்களூரு அணியும் மோதிக் கொண்டது. அப்போது, கவுதம் கம்பீருக்கும், கோலிக்கும் இடையே மைதானத்தில் பயங்கரமாக சண்டை ஏற்பட்டது.
விராட் கோலி டக் அவுட்டானதை மைதானத்தில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் மாம்பழங்களுடன் உற்சாகமாக கொண்டாடினார். இது கோலியின் ரசிகர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அதேபோல், மும்பை அணிக்கு எதிராக லக்னோ விளையாடியது.
அந்த ஆட்டத்தில் நவீன் உல் ஹக் 38 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் மைதானத்தில் கே.எல்.ராகுல் போல் காதுகளை கைகளால் மூடி கொண்டாடினார். "சைலன்ஸ்" என்று செய்கை செய்து சிக்கலில் சிக்கினார்.
இதனால் மும்பை அணி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் உல் ஹக்கை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
பங்கமாய் கலாய்த்த மும்பை அணி வீரர்கள்
இந்நிலையில், சமீபத்தில் மும்பை அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை மும்பை அணி வீரர்கள் சந்தீப் வாரியரும், விஷ்ணு வினோத்தும் மாம்பழங்களை வைத்து கொண்டாடியுள்ளார். மேலும், நவீன் உல் ஹக் கொண்டாடியது போல் காது, வாய், கண்களை மூடி சைகை காட்டி அவரை கலாய்த்து கொண்டாடியுள்ளனர்.
இது போதாது என்று, ராஜஸ்தான் அணியும் மாம்பழம் சின்னத்தில் ஸ்மைலி பதிவிட்டு லக்னோ அணியை கிண்டல் செய்திருக்கிறது.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் நவீன் உல் ஹக்கை பயங்கரமாக கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
MI's players celebrate after a remarkable win against LSG! ?
— OneCricket (@OneCricketApp) May 25, 2023
? - Sandeep Warrier/Instagram #sweetmangoes #LSGvsMI #IPL2023 pic.twitter.com/8aNnq3Ka4H
Everyone with Mango posts all over + they even replicated his celebration ? Naveen Ul Haq getting the taste of his own medicine ? pic.twitter.com/9AKzE5rLxk
— Pari (@BluntIndianGal) May 24, 2023