அப்பாவி மக்கள் மீது கொடூர தாக்குதல்! நீதி கிடைக்க வேண்டும் - பஹல்காம் குறித்து விராட் கோஹ்லி பதிவு
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பதாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மிக மோசமான தாக்குதல்
காஷ்மீரின் பஹல்ஹாமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், 2019ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மிக மோசமான தாக்குதலாகும்.
இந்த தாக்குதலுக்கு தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன்
நீதி கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்
அதில், "பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலால் மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கு அமைதியும், பலமும் கிடைக்கவும் இந்த கொடூரமான செயலுக்கு நீதி கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்தார்.
கோஹ்லியைப் போல் கே.எல்.ராகுல் மற்றும் ஷுப்மன் கில் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |