பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் மரணம், 5 பேர் படுகாயம்
அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
ரிச்மண்ட் டவுன்டவுனில் உள்ள வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பு விழாவின்போது துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும், அவரகள் தந்தையும் மகளும் என தெரியவந்துள்ளது.
Getty Images
மேலும், 5 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை மற்றும் பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஜொனாதன் யங் கூறினார். உள்ளூர்வாசியான ஜான் வில்லார்ட், சத்தம் கேட்டு பால்கனிக்கு வந்து பீதியடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் அழுதுகொண்டே ஓடி வருவதைப் பார்த்தார்.
Getty Images
செய்தியாளர் சந்திப்பில் பேசிய நகர மேயர் லீவர் ஸ்டோனி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று கூறினார். எங்கும் நடக்கக் கூடாத தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Omari Pollard என அடையாளம் காணப்பட்ட 19 வயதுடைய சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து பல துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.

Reuters