சொந்த மகள்களுக்கு தூக்க மாத்திரை அளித்த தாயார்... பின்னர் நடந்த கொடூர சம்பவம்: தற்போது அவரது நிலை
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் தாயார் ஒருவர் தமது மகள்கள் இருவருக்கு தூக்க மாத்திரை அளித்துவிட்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலை கொலை வழக்கு
வர்ஜீனியா மாகாணத்தின் McLean பகுதியிலேயே தொடர்புடைய கொடூர சம்பவம் நடந்துள்ளது. 38 வயதான வெரோனிகா யங்ப்ளட் என்பவர் கடந்த 2018 ஆகத்து மாதம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
Credit: Fairfax County Circuit Court
தமது மகள்களான 15 வயது ஷரோன் காஸ்ட்ரோ, மற்றும் 5 வயது புரூக்ளின் யங்ப்ளட் ஆகிய இருவருக்கும் தூக்க மாத்திரை அளித்து சுட்டுக்கொன்றுள்ளார். முன்னாள் பாலியல் தொழிலாளியான வெரோனிகா மீது பதியப்பட்ட இரண்டு முதல் நிலை கொலை வழக்கும், இரண்டு ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டுகளும் 2023 மார்ச் மாதம் நிரூபணமானது.
வெள்ளிக்கிழமை அவருக்கு தண்டனை அறிவிக்கும் முன்னர், சுமார் 30 நிமிடங்கள் வெரோனிகா தமது நிலை குறித்து விளக்கியுள்ளார். தமது பிள்ளைகள் இருவருக்கும் நல்ல தாயாராக இருந்த தமக்கு, என்ன நடந்தது என்றே தெரியவில்லை, மூளைக்குள் திடீரென்று மாற்றம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
ஆனால், உளவியல் பாதிப்பால் கொலை நடந்தது என்பதை நீதிபதிகள் ஏற்கவில்லை. மேலும், பெற்றோருக்கு பல பொறுப்புகள் உள்ளன, ஆனால் யாரும் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதில் தீவிரம் காட்டுவதில்லை. துரதிர்ஷ்டவசமாக, அந்த பிள்ளைகளின் தாயாரே அவர்களின் மரணத்திற்கு கருவியாகிவிட்டார் என குறிப்பிட்டுள்ளனர்.
78 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பு தெரிவிக்கையில், இந்த கொலைகள் திட்டமிட்டே செய்யப்பட்டவை மற்றும் யங்ப்ளட் ஒரு வாரத்திற்கு முன்பு தான் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை வாங்கினார் என குறிப்பிட்டுள்ளனர்.
@facebook
ஆனால், தமது முன்னாள் கணவரை பழிவாங்கும் வகையிலேயே யங்ப்ளட் இந்த கொலையை செய்துள்ளார் என கூறப்படுகிறது. தமது இளைய மகள் புரூக்ளினை தந்தை அவருடன் அழைத்துச் செல்ல திட்டமிட்ட நிலையிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், குற்றுயிரான நிலையில் 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தங்கள் நிலையை தெரிவித்துள்ளார் ஷரோன் காஸ்ட்ரோ.
துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் தமது முன்னாள் கணவரை அழைத்து நடந்தவற்றை தெரிவிக்கவும் செய்துள்ளார் யங்ப்ளட். இந்த நிலையில் தற்போது அவருக்கு 78 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |