டிக்டாக் 'டிங் டாங் டிட்ச்' விளையாட்டு விபரீதம்: சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞர்!
அமெரிக்காவில் டிக்டாக் "டிங் டாங் டிட்ச்" விளையாடிய பதின்ம வயது இளைஞன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோகத்தில் முடிந்த விளையாட்டு
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஃபிரடெரிக்ஸ்பர்க்(Fredericksburg) நகரில் பாதுகாப்பற்றதாக தோன்றிய டிக்டாக் சமூக ஊடகத்தின் பிரபலமான விளையாட்டான 'டிங் டாங் டிட்ச்' விளையாட்டின் விளைவாக 18 வயது உயர்நிலைப் பள்ளி மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபரீதமான விளையாட்டு ஒரு துயரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவத்தன்று நடந்தது என்ன?
சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில், மைக்கேல் போஸ்வொர்த்(Michael Bosworth) என்ற அந்த பதின்ம வயது இளைஞன் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து 'டிங் டாங் டிட்ச்'("ding dong ditch.") எனப்படும் வைரல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தான்.
அவர்கள் டைலர் சேஸ் பட்லர்(Tyler Chase Butler) என்ற 27 வயது நபரின் வீட்டு கதவை தட்டியுள்ளனர்.
அந்த இளைஞர்கள் தங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக தவறாக நினைத்த பட்லர், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் போஸ்வொர்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான், மேலும் அவனுடைய நண்பர்களில் ஒருவர் படுகாயமடைந்தான்.
காயமடைந்த இளைஞன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கையில், அவர்கள் கதவை தட்டிய பின்னர் ஒளிந்துகொள்ள ஒரு இடத்தை தேடிக் கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |