கணவன் பரிசாக கொடுத்த லொட்டரி டிக்கெட்டில் ரூ.4.8 கோடி வென்ற மனைவி
Virginia woman wins 577,000 dollar from husband's lottery gift: கணவன் பரிசாக கொடுத்த லொட்டரி சீட்டில் மனைவி ரூ.4.8 கோடி வெற்றி பெற்றுள்ளார்.
கணவர் பரிசாக கொடுத்த லொட்டரி டிக்கெட்டில்
அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில், கணவர் பரிசாக கொடுத்த லொட்டரி டிக்கெட்டில், மனைவிக்கு 577,777 டொலர் (சுமார் ரூ. 4.8 கோடி) அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

Virginia Lottery அதிகாரிகள் தெரிவித்ததாவது, அந்த பெண் தனது கணவரிடமிருந்து பரிசாக பெற்ற “777 Super Tripler” ஸ்கிராட்ச் கார்டை பயன்படுத்தியபோது, அதிர்ஷ்டம் கைகொடுத்தது.
கார்டை ஸ்கிராட்ச் செய்தவுடன், 577,777 டொலர் பரிசு வென்றிருப்பது தெரியவந்தது. அந்த பெண், “இது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு. கணவர் கொடுத்த பரிசு எனக்கு வாழ்நாள் நினைவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
விர்ஜீனியா லொட்டரி அதிகாரிகள், இந்த பரிசு வெற்றியாளர் தனது பரிசுத் தொகையை எவ்வாறு பயன்படுத்தப் போகிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆனால், பெரும்பாலான வெற்றியாளர்கள் கடன் தீர்த்தல், வீடு வாங்குதல் அல்லது எதிர்கால சேமிப்புகளுக்காக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
Virginia Lottery 1988-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 30 பில்லியன் டொலருக்கு மேற்பட்ட தொகை கல்வி மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |