அப்பாவின் 100-வது நினைவு நாளுக்கு கூட செல்லாமல் வந்திருக்கிறேன்! விஜய பிரபாகரன் உருக்கம்
விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன், தந்தையின் 100 -வது நாள் நினைவு தினத்திற்கு கூட செல்லவில்லை என்று உருக்கமாக பேசியுள்ளார்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியான தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், விஜய பிரபாகரன் செய்யும் பிரச்சாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர், நேரடியாக வீடுகளுக்கே சென்று பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்து வருகிறார். இவருடன் மக்கள் எளிதாக பழகும் நிலை ஏற்படுகிறது என்று தெரிகிறது.
உருக்கமான பேச்சு
இந்நிலையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட விஜய பிரபாகரன் பேசுகையில், "இன்று எனது தந்தை கேப்டன் விஜயகாந்தின் 100 -வது நாள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. நான் அங்கு அஞ்சலி செலுத்துவதற்கு கூட செல்லாமல் உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.
துளசிகூட வாசம் மாறுமே தவிர, இந்த தவசி மகனின் வார்த்தை எப்போதும் மாறாது. நீங்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நான் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |