வெறும் 4 நிமிடங்களில் கொரோனாவை கண்டறிய முடியும்! சீன விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு
சீன ஆய்வாளர்கள் வெறும் 4 நிமிடங்கில் கொரோனா வைரஸை கண்டறியும் கருவி ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கண்டறிய ஆர்.டி. பிசிஆர் சோதனை பரவலாக பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த சோதனை முடிவுகள் வெளியாக பல மணிநேரம் ஆகும்.
இந்நிலையில் Omicron மிகவும் வேகமாக தாக்கி வரும் நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு நீண்ட தாமதம் ஏற்படுகின்றது. இதையடுத்து கொரோனா வைரஸை வெறும் 4 நிமிடங்களில் கண்டறியும் புதிய சோதனை கருவியை உருவாக்கியுள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஆர்டி-பிசிஆர் ஆய்வக சோதனையைப் போன்று துல்லியமான முடிவுகளைத் தரும் என்றும் இது வெறும் நான்கு நிமிடங்களில் முடிவுகளைத் தரும் என்று கூறியுள்ளனர். சீன ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 33 பேரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டது.
இந்த மாதிரிகளை பிசிஆர் மற்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கருவி என இரண்டிலும் பரிதோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் விஞ்ஞானிகள் உருவாக்கிய கருவியில் வெறும் 4 நிமிடங்களில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டறியபட்டுள்ளது.
இதையடுத்து இந்த புதிய சோதனை முறையின் முடிவுகள் PCR சோதனைகளுடன் சரியாக பொருந்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.