இந்தியா-ரஷ்யா இடையே Visa-Free பயண ஒப்பந்தம்., எப்போது அமுல்?
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் பயணிக்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா-ரஷ்யா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு பகுதியாக விசா இல்லாத பயணத்திற்கான (Visa-Free Travel) ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் மாதம் இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
2024 இறுதியில் இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வரலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து, இருநாட்டு மக்களும் தடையின்றி பயணம் செய்யும் வாய்ப்பை பெறலாம்.
தற்போது, சீனா மற்றும் ஈரான் குடிமக்கள் விசா இல்லாமல் ரஷ்யா செல்ல முடியும். இதில் இந்தியாவையும் சேர்த்துக் கொள்வதன் மூலம், சுற்றுலாத் துறையில் பாரிய பாய்ச்சலை எடுக்க முடியும் என்று ரஷ்யா நம்புகிறது.
உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிலிருந்து விலகி நிற்கின்றன. இந்த நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
நெருக்கமான உறவுகளைக் கொண்ட நாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ரஷ்யா முயற்சிப்பதற்கு இதுவே காரணம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia India Relationship, India Russia Relationship, Visa Free travel to russia, India-Russia Visa Free travel