சுவிஸ் உயிரியல் பூங்காவுக்குச் சென்ற பார்வையாளர்கள் அலறியடித்து ஓட்டம்
சுவிட்சர்லாந்தில் உயிரியல் பூங்காவுக்குச் சென்ற பார்வையாளர்களை அலறியடித்துக்கொண்டு ஓட வைத்தது ஒரு விடயம்.
பார்வையாளர்கள் அலறியடித்து ஓட்டம்
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்தில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவுக்குச் சென்றிருந்த பார்வையாளர்கள் கூண்டுகளுக்குள் அடைபட்டிருந்த விலங்குகளை பார்வையிட்டுக்கொண்டிருந்துள்ளார்கள்.
அப்போது, திடீரென பாம்பு ஒன்று வெளியே நடமாடுவதைக் கண்ட சிலர் அலறி சத்தமிட, மற்றவர்கள் பயந்து ஓட ஆரம்பித்துள்ளார்கள்.
உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட, அவர்கள் வந்து அந்த பாம்பைப் பிடித்துள்ளார்கள்.
அப்போதுதான் தெரியவந்தது, அது அந்த உயிரியல் பூங்காவிலுள்ள புல்வெளியில் வாழும் ஒரு விஷமற்ற பாம்பு என்பது.
என்றாலும், பார்வையாளர்கள் பாம்பு குறித்து தங்களை எச்சரித்ததுதான் சரியான முடிவு என்று கூறுகிறார்கள் அதிகாரிகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |