ஒரு நிறுவனத்தின் நெருக்கடி... விமான கட்டணங்கள் 25 சதவிகிதம் வரை அதிகரிப்பு
விஸ்தாரா நிறுவனத்தின் நெருக்கடி நிலை, அதிக பயண தேவைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் விமான கட்டணம் 20 முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
உள்நாட்டு வழித்தடங்களில்
விஸ்தாரா விமான சேவை நிறுவனம் நாள் ஒன்றிற்கு 25 முதல் 30 விமானங்களை ரத்து செய்து வருகிறது. விஸ்தாரா நிறுவனத்தின் தற்போதைய திறனில், இது சுமார் 10 சதவீதம் என்றே கூறப்படுகிறது.
இந்த எண்ணிக்கை குறைப்பு என்பது முக்கியமாக உள்நாட்டு வழித்தடங்களில் சேவையை பாதித்துள்ளது. ஏற்கனவே பல மாதங்களாக இந்திய விமான சேவை நிறுவனங்கள் பல வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
திவாலான Go First விமான சேவை நிறுவனம், இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட IndiGo விமான சேவை நிறுவனத்தின் 70 விமானங்கள் என அடுத்தடுத்து சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது விமான சேவை நிறுவனங்கள்.
இதனால் குறிப்பிட்ட சில வழித்தடங்களுக்கு விமான கட்டணம் பெருமளவு உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில், ஏப்ரல் 1 முதல் 7ம் திகதி வரையில் விமான கட்டணங்கள் 39 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கோடை காலத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களுக்கான சராசரி விமானக் கட்டணங்கள் 20-25 சதவிகிதம் உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
20-25 சதவிகிதம் அதிகரித்துள்ளது
இந்த கட்டண உயர்வு குறிப்பாக டெல்லி-கோவா, டெல்லி-கொச்சி, டெல்லி-ஜம்மு மற்றும் டெல்லி-ஸ்ரீநகர் போன்ற முக்கிய உள்நாட்டு வழித்தடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் 20-25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லி-மும்பை மற்றும் மும்பை-பெங்களூரு போன்ற டிரங்க் வழித்தடங்களில் அதிக விமான கட்டணங்களின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் குறுகிய தூரத்திற்கு, குறிப்பாக தனிப்பட்ட மற்றும் குடும்பப் பயணங்களுக்கு ரயில் சேவையை பயன்படுத்துன் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுவார்கள்.
இதனிடையே, விஸ்தாரா நிறுவனம் நெருக்கடியை எதிர்கொண்டாலும், உள்ளூர் வழித்தடங்களில் கடந்த கோடையை ஒப்பிடுகையில் வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது.
மேலும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட சில வழித்தடங்களுக்கு பெரிய விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இதனால் அதிக பயணிகள் சேவையை பயன்படுத்த முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |