ஆசிய தடகள போட்டி; கால் வீக்கத்துடன் ஓடி இந்தியாவிற்காக பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை
தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ், கால் வீக்கத்துடன் ஓடி இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
2வது இடத்தில் இந்தியா
தென் கொரியாவின் குமியில், 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் 26 மே அன்று தொடங்கி, இன்று வரை நடைபெற்றது.
இதில், இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் உட்பட 24 பதக்கங்களை வென்று, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இதில், 6 பதக்கங்களை, இறுதி நாளான இன்று இந்தியா வென்றது.
15 தங்கம் உட்பட 26 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 4 தங்கம் உட்பட 24 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்தில் உள்ளது.
கால் வீக்கத்துடன் ஓடி பதக்கம்
🚨 VITHYA RAMRAJ WINS 400mH BRONZE 🥉
— The Khel India (@TheKhelIndia) May 31, 2025
She clocked 56.46s in the Women’s 400m Hurdles at Asian Athletics Championship 💪
WELL DONE VITHYA RAMRAJ 🇮🇳👏pic.twitter.com/MCHb4QKQ4v
இன்றைய பெண்களுக்கான 4*100 மீ தொடர் ஓட்டத்தில், இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த, அணியில் தமிழக வீராங்கனை அபிநயா இடம்பெற்றிருந்தார்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், 56.46 வினாடிகளில் ஓடி தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்த போட்டியில், கால் வீக்கத்துடன் ஓடி வித்யா ராம்ராஜ் பதக்கம் வென்றதற்கு, அவரது சகோதரி இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |