அரசு ஊழியர்கள் பலர் கொத்தாக வேலை இழப்பார்கள்... பேரிடியை இறக்கிய விவேக் ராமசாமி
ட்ரம்பின் புதிய அரசாங்கத்தில் அரசு ஊழியர்கள் பலர் வேலையில் இருந்து தூக்கப்படுவார்கள் என தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி சூசகமாக தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களை வெளியேற்றும்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், செயல் திறன் துறை என்று புதிதாக ஒரு துறையை உருவாக்கி, அதற்கு டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமியையும் தலைவர்களாக நியமித்துள்ளார் ட்ரம்ப்.
இந்த நிலையில் வியாழக்கிழமை புளோரிடாவில் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விவேக் ராமசாமி, எலோன் மஸ்கும் நானும் தெரிவு செய்யப்படாத மில்லியன் கணக்கான அரசு ஊழியர்களை வெளியேற்றும் உன்னதமான பணியை முன்னெடுக்க இருக்கிறோம்.
இதனூடாக நாட்டைக் காப்பாற்ற முயற்சி செய்வோம் என தெரிவித்துள்ளார். எலோன் பற்றி உங்களுக்கு தெரியுமா என எனக்கு தெரியாது, ஆனால் அவர் உளி கொண்டு வரவில்லை. அவர் ஒரு ரம்பம் கொண்டு வருகிறார்.
மஸ்க் மற்றும் ராமசாமி உறுதி
அதை நாங்கள் அதிகாரவர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்த இருக்கிறோம் என்றார். அமெரிக்காவுக்கு விடியல் வரப்போகிறது, ஒரு புதிய துவக்கம் அமெரிக்காவுக்கு தேவை என்றும் விவேக் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தங்கள் துறையின் செயல்பாடு குறித்து ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுக்கு நேரலையில் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் மஸ்க் மற்றும் ராமசாமி உறுதி அளித்துள்ளனர்.
தங்களின் இலக்கு என்பது அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, செயல்பாடு மற்றும் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதே என்றார்.
மட்டுமின்றி, எலோன் மஸ்க்கும் நானும் ஜனாதிபதி ட்ரம்ப் எங்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றும் பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |