200 மெகாபிக்ஸல் ZEISS Camera-வுடன் அறிமுகமாகும் புதிய Vivo X 200 தொடர்
தொழில்நுட்ப நிறுவனமான Vivo அதன் புதிய Vivo X 200 ஸ்மார்ட்போன் தொடரை நாளை (டிசம்பர் 12) அறிமுகப்படுத்த உள்ளது.
இதில் Vivo X 200 மற்றும் Vivo X 200 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
விவோ தனது வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் Vivo X 200 தொடரின் டீஸர்களுடன், வெளியீட்டு திகதி குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 200-megapixel telephoto camera பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஜேர்மன் optics பிராண்டான Zeiss உருவாக்கியுள்ளது.
இது இந்தியாவின் முதல் 200MP ZEISS APO telephoto camera-வாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
Vivo X200 சீரிஸில் புதிய Funtouch OS 15-ல் இயங்கும் MediaTek Dimensity 9400 SoC processor கிடைக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தவிர, இது advanced Vivo V3+ imaging processor-ஐ பெறும்.
இதைத் தவிர வேறு எந்த தகவலையும் நிறுவனம் வழங்கவில்லை, ஆனால் அதன் பல அம்சங்கள் ஊடக அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Vivo X 200, Vivo X 200 Camera, Vivo X200 Pro, Vivo X200 Pro 200-megapixel telephoto camera, Zeiss Camera