VJ பிரியங்காவின் கணவர் இலங்கை தமிழ் அரசியல்வாதியின் குடும்ப வாரிசா?
VJ பிரியங்காவின் கணவர் வசி, இலங்கை தமிழ் அரசியல்வாதியின் குடும்பத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரியங்கா - வசி திருமணம்
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
சமீபத்தில், வசி என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் காதல் திருமணம் ஆகும்.
பிரியங்கா கணவர் வசி, சீரியல் தயாரிப்பாளர், DJ என பல்வேறு தகவல்கள் இணையத்தில் வலம் வந்தது.
இந்நிலையில், அவர் இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் என தெரிய வந்துள்ளது.
இலங்கை தமிழ் அரசியல் குடும்பம்
மேலும், வசி இலங்கையின் முக்கிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவராகவும் இருந்த இரா.சம்பந்தனின் தங்கை மகன் என தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலைநிகழ்ச்சிக்காக இலங்கை செல்வது வழக்கம்.
அப்படி பிரியங்கா செல்லும் போது, வசியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு பின்னர் காதலாகி, திருமணத்தில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |