ஒரு வீடியோவிற்கு இத்தனை லட்சமா..! YouTube-இல் அசத்தும் Vj சித்துவின் சொத்து மதிப்பு தெரியுமா?
பொதுவாகவே திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தான் அதிகமாக பலரும் தேடி வருவார்கள்.
ஆனால் தற்போது YouTube மூலம் பிரபலமாகும் பலரது சொத்து மதிப்பு குறித்தும் பலர் தேடி வருகின்றனர்.
அந்தவகையில் இந்த பதவில் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு வயதினரையும் கவர்ந்து வரும் Vj சித்து YouTube சேனலின் வருவாய் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
யார் இந்த Vj சித்து?
சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகும் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் Vj சித்து. இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு வயதினரையும் கவர்ந்த Youtuber-களில் ஒருவராகவும் இவர் இருக்கிறார்.
இவர் முதலில் தொகுப்பாளராக சில தொலைக்காட்சிகளிலும், youtube சேனலிலும் பணியாற்றி வந்தார்.
பிளாக் ஷீப் YouTube சேனலில் "ஃபன் பன்ரோம்" என்ற அவரது நிகழ்ச்சியின் மூலம் அவர் பிரபலமானார். இது அவருக்கு கணிசமான ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுக்கொடுத்தது. சமூக சேவை சார்ந்த "சிந்தனை செய் சித்துவுடன்" நிகழ்ச்சியையும் சித்து தொகுத்து வழங்கினார்.
2019 ஆம் ஆண்டில் "கில்லாடி ராணி" என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.
அவரது YouTube சேனலான விஜே சித்து வ்லாக்ஸும் (VJ Siddhu Vlogs) நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, அவருடைய பல வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வைகளைக் குவித்துள்ளன.
தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்த சித்து, Little Flower மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, EGS பிள்ளை பொறியியல் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்.
அவர் ஷாலினி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இனியாழ் என்ற மகள் உள்ளார். அவரும் "Ini Vlogs" சேனலின் பிரபலமான யூடியூபராகவும் உள்ளார்.
Vj சித்து YouTube சேனல்
YouTube சேனல் சுமார் 36 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டது. இதுவரை இந்த சேனலில் வாரத்திற்கு 4 வீடியோக்கள் என்ற கனக்கில் 281 வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன.
சேனல் தொடங்கிய 15-16 மாதங்களுக்குள் Vj சித்து சேனலில் பதிவிடப்பட்டுள்ள வீடியோக்கள் 74 கோடியே 93 லட்சத்து 20 ஆயிரத்து 961 பார்வைகளை பெற்றுள்ளது.
ஒவ்வொரு வீடியோவின் எண்ணிக்கையும் 12.52 நிமிடங்கள் வரை இருக்கும்.
கொல்கத்தா, இலங்கை, தென் கொரியா, மலேசியா மற்றும் பாளி என பல்வேறு இடங்களுக்கு சென்று Vlog செய்து, அதுகுறித்து தகவல்களை வீடியோவாக பதிவிடுவதே இவரின் வழக்கம்.
மேலும் திரைப்படங்களின் ப்ரோமோஷன் என்றாலும் Vj சித்து Vlogs இல்லாமல் இருப்பது இல்லை.
சேனலின் வருமானம் எவ்வளவு இருக்கும்?
பொழுதுபோக்கு சேனல் என்றால் ஒரு வீடியோவின் ஆயிரம் பார்வைகளுக்கு 7 ரூபாய் முதல் 74 ரூபாய் கிடைக்கும். காமெடி சேனல் என்றால் 22 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை கிடைக்கும்.
பொழுதுபோக்கு சேனல் என்றால் Vj சித்து சேனலுக்கு இதுவரை 2 கோடியே 77 லட்சத்து 24 ஆயிரத்து 875 ரூபாய் கிடைத்திருக்கும்.
இதுவே காமெடி சேனலாக இருந்தால் ஒரு கோடியே 87 லட்சத்து 33 ஆயிரத்து 24 ரூபாய் இருக்கும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |