உக்ரைனில் வைத்து கொல்லப்பட்டார் விளாடிமிர்! ரஷ்யா அதிமுக்கிய அறிவிப்பு... வெளிவந்த புகைப்படம்
ரஷ்யா தனது எட்டாவது ஜெனரலும், 34வது கர்னலுமான ”விளாடிமிர் ஃப்ரோலோ”வை இழந்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 52 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் போர் புரிந்து வருகின்றன. அண்டை நாடுகளின் உதவியுடன் உக்ரைன் அரசு ரஷ்யாவுக்கு கொஞ்சமும் சளைக்காமல் போர் புரிந்து வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த எட்டாவது ஜெனரலும், 34வது கர்னலுமான விளாடிமிர் ஃப்ரோலோவ் உக்ரைனில் கொல்லப்பட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஆயுதப் பிரிவின் போர்ப்படை துணைத் தளபதியான மேஜர் ஜெனரல் விளாடிமிர் ஃப்ரோலோவ் புடினுக்கு மிக நெருக்கமானவர். உயிரற்ற அவரின் உடல் ரஷ்யாவின் St Petersburgக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட விளாடிமிர் ஃப்ரோலோவ்
அவர் எப்படி இறந்தார் மற்றும் உக்ரைனின் எந்த இடத்தில் இறந்தார் என்பது தெரியவில்லை, ஆனால் சில நாட்களுக்கு முன்னர் விளாடிமிர் ஃப்ரோலோவ் கொல்லப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
உக்ரைனின் டான்பாஸில் ள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் மீண்டும் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தை கேட்கக்கூடாது என்பதற்காக தனது உயிரை அவர் தியாகம் செய்தார் என St Petersburg கவர்னர் தெரிவித்துள்ளார்.
மேலும் விளாடிமிர் ஃப்ரோலோவ் உண்மையான தேசபக்தர்,ஒரு துணிச்சலான மனிதர், அவர் நேர்மையாகவும் இறுதிவரையிலும் தனது இராணுவ கடமைகளை நிறைவேற்றினார் என கூறியுள்ளார்.