கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்ட விளாடிமிரை மீண்டும் தேடுபடும் நபராக அறிவித்த ரஷ்யா
கடந்த கோடையில் விடுவிக்கப்பட்ட விளாடிமிர் காரா-முர்சா மீண்டும் ரஷ்யாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.
25 ஆண்டுகள் சிறை
தேசத்துரோகம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக விளாடிமிர் காரா-முர்சாவிற்கு(Vladimir Kara-Murza) 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், பனிப்போருக்குப் பிறகு ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக கடந்த கோடையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம் முக்கிய கிரெம்ளின் விமர்சகரான விளாடிமிர் காரா-முர்சாவுக்கு (44) கைது உத்தரவு பிறப்பித்துள்ளதாக Mediazona செய்தி வெளியிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் தேடப்படும் நபர்களின் தரவுத்தளத்தை மேற்கோள்காட்டி, இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகம் கூறியுள்ளது. அதே சமயம் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை குறிப்பிடவில்லை.
வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் தனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க மறுப்பதாக காரா-முர்சா கடந்த ஆகத்து மாதம் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |