புடினிடம் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சொன்ன எம்.பி.களுக்கு நேர்ந்த விளைவு!
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் அழைப்பு விடுத்த ரஷ்ய அதிகாரிகள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுத்த இரண்டு ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
லியோனிட் வாஸ்யுகேவிச் (Leonid Vasyukevich) மற்றும் ஜெனடி ஷுல்கா (Gennady Shulga) ஆகியோர் பிராந்திய பாராளுமன்றத்தில் கட்சியின் பிரிவில் இருந்து நீக்கப்பட்டதாக நியூஸ் வீக் செய்தி வெளியிட்டுள்ளது.
புடினுடைய இரகசிய காதலி தொடர்பில் கனடா எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கை
கடந்த வெள்ளியன்று கிழக்கு ரஷ்யாவில் உள்ள பிரிமோர்ஸ்கி பகுதியின் சட்டமன்றக் கூட்டத்தின் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்குப் பிறகு இரு எம்.பி.க்களும் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர்.
உக்ரைனில் ரஷ்ய இராணுவம் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கப்பட்ட போதிலும், நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பொது விசுவாசத்தை பெருமளவில் அனுபவித்து வந்த புடினுக்கு, இது அவருக்கு எதிரான ஒரு அரிய கருத்து வேறுபாடாகும்.
வாஸ்யுகேவிச் புடினிடம் போரை நிறுத்துமாறும் உக்ரைனில் இருந்து படைகளை திரும்பப் பெறுமாறும் வேண்டுகோள் விடுத்தார், மேலும் அவர் மூன்று கம்யூனிஸ்ட் கட்சி சகாக்களான ஷுல்கா, நடால்யா கொச்சுகோவா மற்றும் அலெக்சாண்டர் சுஸ்டோவ் ஆகியோரின் சார்பாக பேசுவதாகவும் கூறினார்.
பழி தீர்த்த ரஷ்யா... சிக்கலில் ஐந்தாவது ஐரோப்பிய நாடு: அச்சத்தில் பொதுமக்கள்
ரஷ்யா இராணுவ நடவடிக்கையை நிறுத்தவில்லை என்றால், நாட்டில் இன்னும் அதிகமான அனாதைகள் இருப்பார்கள் என்று லியோனிட் வாஸ்யுகேவிச் கூறியுள்ளார்.
அதேபோல், ரஷ்ய கலைஞர்கள், ஊடகப் பிரமுகர்கள் மற்றும் பல தொழில் அதிபர்கள் உக்ரேனில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராகப் பேசியுள்ளனர்.
ஆனால் மூன்று மாத போருக்கு பிறகும், புட்டினின் உள் வட்டத்திலோ அல்லது உயர் அதிகாரிகளிலோ வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை.