ஆட்சிக் கவிழ்ப்பு சதி? பங்கரில் பதுங்கிய புடின்
ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகவும், அவர் பங்கர்களில் பதுங்கியிருந்தவண்ணம் பணி செய்துவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆட்சிக் கவிழ்ப்பு சதி?
ரஷ்ய செல்வந்தர்கள் சிலர் புடினுடைய ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டுவருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, புடின் வழக்கமாக தங்கும் இடங்களில் தங்குவதில்லையாம்.
மேலும், 2026 மார்ச் துவக்கம் முதல், முக்கிய தகவல்கள் லீக்கானதாகவும், புடினுடைய ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றதால் கிரெம்ளின் வட்டாரமும் புடினும் கவலையடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
POOL/AFP via Getty Images
அத்துடன், புடின் வழக்கமாக தங்கியிருக்கும் இடங்கள் ட்ரோன் தாக்குதலுக்குள்ளாகலாம் என்றும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாம்.
குறிப்பாக, புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாதுகாப்புத்துறை அமைச்சரான செர்கே ஷோய்கு இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பின்னால் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றின் உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளதாம்.
ஆகவே, புடின் தான் வழக்கமாக தங்கும் இடங்களில் தங்காமல், புதுப்பிக்கப்பட்ட பங்கர்களில் தங்கிவருவதாகவும், அவர் தங்கியிருக்கும் இடத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |