உக்ரைன் போரில் கொல்லப்பட்ட முதல் பெண் இராணுவ வீரர்: அஞ்சலி செலுத்திய ரஷ்யா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் கொல்லப்பட்ட முதல் பெண் ரஷ்ய இராணுவ வீரருக்கு அந்த நாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் போரில் பலியாகும் முதல் பெண் இராணுவ வீரர் இவர் என தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தாயாரான 35 வயது Anastasia Savitskaya என்பவர் உக்ரைனில் ரஷ்யா இழக்கும் இன்னொரு முக்கிய அதிகாரி எனவும் கூறப்படுகிறது.
அவரது சடலமானது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சிறு வயதில் இருந்தே இராணுவத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என ஆசைப்பட்ட அவர், தமது 18 வயதில் ரஷ்ய இராணுவத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, முன்னாள் இராணுவ வீரரும் Anastasia Savitskaya-ன் கணவரும், இது தாங்க முடியாத துயரம் என கண்கலங்கியுள்ளார். குறிப்பிட்ட சில மேற்கத்திய நாடுகளைப் போலன்றி, போருக்கு ரஷ்ய பெண் இராணுவ அதிகாரிகள் அனுப்பப்படுவது அரிதாகவே பார்க்கப்படுகிறது.
துணிச்சல் மிகுந்த Anastasia Savitskaya உக்ரைன் மீதான போரில் விருப்பத்துடன் கலந்து கொண்டதாகவும், ஆபத்தான கட்டம் இதுவென உணர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
Anastasia Savitskaya உட்பட உக்ரைன் மீதான விளாடிமிர் புடினின் போரில் இதுவரை 74 கர்னல்கள் கொல்லப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, இரண்டு நாட்களில் மொத்த 12 ரஷ்ய கர்னல்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.