உக்ரைன் போரில் தோற்றால்... விளாடிமிர் புடினின் திட்டம் இதுதான்: கசிந்த ரகசியம்
உக்ரைன் மீதான போரில் ரஷ்யா தோற்றால் விளாடிமிர் புடின் தென் அமெரிக்காவுக்கு தப்பிவிடுவார் என தகவல் ஒன்று கசிந்துள்ளது.
புடினின் குடும்பத்தினர் தப்ப திட்டம்
குறித்த திட்டத்திற்கு நோவாவின் பேழை என பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், புடினின் குடும்பத்தினர் மற்றும் எஞ்சிய நெருக்கமான உறுப்பினர்கள் அனைவரும் அர்ஜென்டினா அல்லது வெனிசுலாவுக்கு தப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
@reuters
இதனிடையே, பிரபலமான விஞ்ஞானியும் புடினின் ஆதரவாளருமான ஒருவர் சீனாவில் தஞ்சமடைய வலியுறுத்திய நிலையில், ரஷ்ய நிர்வாகம் அதை ஏற்க மறுத்துள்ளதுடன், தோற்றவர்களை சீன நிர்வாகம் விரும்புவதில்லை எனவும் காரணம் கூறியுள்ளது.
2008 முதல் 2010 வரையில் புடினுக்கு உதவியாளராக செயல்பட்ட ஒருவர் குறித்த தகவல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார். பொதுவாக இதுபோன்ற அரண்மனை ரகசியங்களை தாம் வெளியிடுவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தமக்கு கிடைத்துள்ள தகவல் உறுதியானது என்பதுடன், கிடைத்த தரவுகள் கொஞ்சம் பரபரப்பானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் உறுதியானது
புடினுக்கு மிக நெருக்கமான கோடீஸ்வரர் ஒருவரே வெனிசுலாவை தெரிவு செய்ய வலியுறுத்தியுள்ளார். அங்குள்ள தற்போதைய ஜனாதிபதியுடன் புடினுக்கு தனிப்பட்ட நல்ல உறவு இருப்பதால், வேறு பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை என அவர் கருதுகிறார்.
Picture: East2West News
இதனிடையே, ரஷ்யாவுக்குள் ராணுவ முகாம் மீது ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட விவகாரம் புடின் நிர்வாகத்தை உலுக்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா பழி போட்டாலும், இதுவரை இந்த தாக்குதல் தொடர்பில் உக்ரைன் பொறுப்பேற்கவில்லை.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.