சொந்த மகளைக் கண்காணிக்க உளவாளிகளை அனுப்பிய புடின்
வெளிநாடு செல்லும் மகளைக் கண்காணிக்க உளவாளிகளை அனுப்பியுள்ளார் புடின்.
மக்கள் வரிப்பணத்தில் ஏராளமான உளவாளிகள் புடினுடைய மகளைக் கண்காணிப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.
காதலனுடன் லண்டனுக்குச் சென்ற தன் மகளைக் கண்காணிக்க ஏராளமான உளவுத்துறையினரை புடின் அனுப்பியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
புடினுடைய மகளான கத்தரீனா (Katerina Tikhonova, 35), ரஷ்யாவின் இளவயது கோடீஸ்வரரான Kirill Shamalov (40) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்தத் திருமணம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.
அதற்குப் பின், Igor Zelensky என்னும் பாலே நடனக்கலைஞரை காதலிக்கத் துவங்கியுள்ளார்.
Image: Sputnik/AFP via Getty Images
இந்த ஜெலன்ஸ்கியை சந்திப்பதற்காகத்தான் கத்தரீனா பலமுறை ஜேர்மனியிலுள்ள Munich முதல் லண்டன் வரை பல இடங்களுக்குச் சென்றுள்ளார். கத்தரீனா ஜெலன்ஸ்கி ஜோடி, பெரிய ஹொட்டல்களில் தங்க, அதே ஹொட்டல்களில் அவர்களுக்கு அருகருகே உள்ள அறைகளில் ரஷ்ய உளவாளிகள் தங்குவார்களாம்.
அதுவும் சாதாரண ஆட்கள் அல்ல, புடினுடைய தனிப்பட்ட பாதுகாவலர்கள் முதல் ரஷ்ய உளவுத்துறையிலுள்ள முக்கிய உளவாளிகள் பலர் கத்தரீனாவுடன் பயணிப்பார்களாம்.
Image: Bloomberg via Getty Images
தற்போது கத்தரீனா வரிப்பணத்தில் தனது காதலனுடன் வெளிநாடுகளுக்குச் சென்றதைக் குறித்த ரகசிய ஆவணங்களும் ஊடகங்கள் மேற்கொண்ட ரகசிய ஆய்வுகளும் வெளியாகியுள்ளன.
மேற்கத்திய நாடுகளில் ஆடம்பரமாக வாழும் ரஷ்யர்கள் மீது கோபத்தைக் காட்டுபவர் புடின் என அறியப்பட்டுள்ள நிலையில், அவரது மகளுடைய காதலுக்காக மக்கள் வரிப்பணத்தில் உளவுத்துறையினர் வெளிநாடுகள் சென்ற செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: Vesti Rossiya