சொத்துக்களை முடக்கும் சட்டத்தில் கையெழுத்திட்ட புடின்
நாட்டின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டதாக, குற்றம்சாட்டப்பட்டு வெளிநாட்டில் வசிக்கும் ரஷ்யர்களின் சொத்துக்களை முடக்கும் சட்டத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டார்.
சொத்துக்களை முடக்கும் சட்டம்
ரஷ்யாவின் நலன்களுக்குக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, வெளிநாட்டில் வசிக்கும் ரஷ்யர்களின் சொத்துக்களை முடக்கும் சட்டம், 2024 அக்டோபரில் டாடர்ஸ்தான் குடியரசின் பிராந்திய சட்டமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டது.
பின்னர் கடந்த மாத இறுதியில் State Duma-வினால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு அமர்வுகளின்போது, State Duma சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின் இந்த சட்டத்தைப் பாராட்டினார்.
மேலும் அவர், உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களைப் பாதுகாப்பதற்கு இது ஒரு அவசியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
புடின் கையெழுத்து
இந்த நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) சொத்துக்களை முடக்கும், வங்கிக் கணக்கு நிதியை அரசு பறிமுதல் செய்ய அதிகாரம் அளிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
இச்சட்டம் ரஷ்ய இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதிக்கக் கோருதல், "வெளிநாட்டு முகவர்கள்" தொடர்பான சட்டங்களை மீறுதல், "விருப்பத்தகாத" அமைப்புகளுடன் தொடர்பில் இருத்தல் மற்றும் "பயங்கரவாதத்தை" ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களைக் குறிவைக்கிறது.
இந்த சட்டத்தின் மூலம் இனி, வெளிநாட்டில் வசிக்கும் ரஷ்யர்களின் சொத்துக்களை முடக்க அதிகாரிகள் நீதிமன்றத் தீர்ப்புகாக காத்திருக்க வேண்டியதில்லை. செப்டம்பர் 1ஆம் திகதி முதல் இச்சட்டம் அமுலுக்கு வருகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |