விளாடிமிர் புடின் நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்து நிற்கும் இந்த பெண் யார்? வைரலாகும் வீடியோ
உலக ஆசிரியர் தினத்தையொட்டி பல வருடங்களுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது வகுப்பு ஆசிரியரை நேரில் சந்தித்த நெகிழ்ச்சியூட்டும் தருணத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
சர்வதேச ஆசிரியர் தினமான நேற்று (அக்டோபர் 5) ஆசிரியர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் ரஷ்யாவின் ஜனாதிபதியின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது.
அதில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வகுப்பு ஆசிரியரை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்து நிற்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி, புடின் அதே ஆசிரியருடன் தனது குழந்தை பருவத்தின் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டது.
Picture: Twitter @MFA-Russia
அந்த டீவீட்டில், சரவதேச அளவில் ஆசிரியர்களுக்கு நாள் அர்ப்பணிக்கப்படுவதற்கு முன்பே, ரஷ்ய கலாச்சாரத்தில் ஆசிரியர்கள் எப்போதும் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் மதிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது வகுப்பு ஆசிரியருடன் கட்டியணைத்து அன்பை வெளிக்காட்டும் வீடியோவும் இணையத்தில் வைரலாகிவருகிறது.
விளாடிமிர் புடின், ஒரு கடுமையான தலைவராக அடிக்கடி காணப்படும் நிலையில், இந்த புகைப்படங்களும், வீடியோ காட்சியும் அவரை சற்று வித்தியாசமானவராக காட்டுகிறது.
???Today is World #TeachersDay! Congratulations to our dear tutors!
— MFA Russia ?? (@mfa_russia) October 5, 2021
??In Russia, teachers have always been revered, long before this international holiday emerged.
? President #Putin with his class teacher ? pic.twitter.com/y29ytyE3v4