'இளம் ரஷ்யர்கள் தேசபக்தி இல்லாதவர்கள்' 7 கோடி பேரின் சமூக ஊடக கணக்குகளில் ஊடுருவிய புடினின் மகள்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் மகள், இளம் ரஷ்யர்கள் சமூக ஊடகங்களில் போதுமான தேசபக்தியுடன் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யர்கள் விசுவாசமாக இல்லை
ரஷ்யர்கள் அதிபருக்கு விசுவாசமாக இருக்கிறார்களா என்பதை அறிய விளாடிமிர் புட்டினின் மகள் கேடரினா டிகோனோவா (Katerina Tikhonova) 70 மில்லியன் சமூக ஊடக கணக்குகளை ஸ்கேன் செய்ததுள்ளார்.
விளாடிமிர் புட்டினின் மகள் கேடரினா, 18 முதல் 35 வயதுடைய 70 மில்லியன் ரஷ்யர்களின் சமூக ஊடக கணக்குகளில் நுழைந்து, அவர்கள் தனது சர்வாதிகாரி தந்தைக்கு விசுவாசமாக இல்லை என்று முடிவு செய்துள்ளார்.
Image: Vesti Rossiya
புடினின் மகள்
அக்ரோபாட்டிக் நடனக் கலைஞராக இருந்து பின்னர் மல்டி மில்லியனராக மாறிய கேடரினா டிகோனோவா (36), மாஸ்கோவில் உள்ள இன்னோபிராக்டிகா இன்ஸ்டிடியூட் தலைவராக மாறினார், இந்த குழு ரஷ்யர்கள் புடினின் அரசை நேசிக்கவில்லை என்பதைக் கண்டறிந்தது.
உக்ரைன் போரில் வீரர்களை இழக்கும் இந்த தலைமுறையினரிடையே "தேசபக்தி" தெளிவாக இல்லை என்பதை அவரது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
மேலும், ரஷ்யாவின் பல இனக்குழுக்களிடையே ஒற்றுமையின்மையும் உள்ளது என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.
Image: Vesti/east2west news
புடினின் இரும்புக்கர ஆட்சியின் கீழ் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை வாழ்ந்த இளம் தலைமுறை ரஷ்யர்கள் ஒரு நிலையான சமுதாயத்திற்குத் தேவையான "பாரம்பரிய மதிப்புகள்" இல்லை என்று திட்ட மேலாளர் லைமா லெமெய்ர் புலம்பினார்.
முக்கிய பொறுப்புகள்
டிகோனோவா, புடினின் முன்னாள் மனைவியும் முன்னாள் ரஷ்ய முதல் பெண்மணியுமான லியுட்மிலா புதினாவுடனான (Lyudmila Putina) இரண்டாவது மகள் ஆவார்.
Image: Getty Images
அவர், மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் சிக்கலான அமைப்புகளின் கணித ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் உள்ளார்.
மேலும் மேற்கத்திய தடைகளைத் தவிர்ப்பதற்காக இறக்குமதி மாற்றீட்டை மேற்பார்வையிடும் உயர் அதிகாரம் கொண்ட குழுவிற்கு கூட்டாக தலைமை தாங்க அவர் நியமிக்கப்பட்டார்.