250 கிமீ ரேஞ்சுடன் அறிமுகமான VLF Strada மின்சார ஸ்கூட்டர்
VLF Strada EV Scooter Launched in India: 250 கிமீ ரேஞ்சுடன் புதிய VLF Strada மின்சார ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது.
VLF Strada மின்சார ஸ்கூட்டர்
இந்தியாவில் VLF India நிறுவனம் தனது புதிய மின்சார ஸ்கூட்டர் VLF Strada-வை அறிமுகப்படுத்தியுள்ளது. விலை ரூ.1.20 லட்சம் முதல் தொடங்குகிறது.

இந்த ஸ்கூட்டர் City மற்றும் Max என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது.
City மாடலில் 2.16kWh பேட்டரி உள்ளது, 130 கிமீ வரை பயணிக்க முடியும். Max மாடலில் 4.32kWh பேட்டரி உள்ளது, 250 கிமீ வரை பயணிக்க முடியும்.
இது 4.8kW சக்தி மற்றும் 34Nm டார்க் வழங்கும் BLDC hub motor-ஆல் இயக்கப்படுகிறது. மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன - Eco (45 kmph), City (65 kmph), Sport (85 kmph).
வடிவமைப்பு மற்றும் வசதிகள்:
- 5-inch TFT டிஸ்ப்ளே, keyless entry, USB Type-A & Type-C சார்ஜிங்.
- Dual-beam LED ஹெட்லாம்ப், integrated indicators, luggage rack, 780mm seat height.
- 16-inch முன் சக்கரம், 14-inch பின்சக்கரம், disc brakes (CBS system).
விலை:
VLF Strada City - ரூ.1.20 லட்சம்
VLF Strada Max - ரூ.1.55 லட்சம்
VLF Strada ஸ்கூட்டர் Yamaha EC-06 மற்றும் Suzuki E-Access போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.
VLF Strada ஸ்கூட்டர் Carbonio Black, Urbano Silver, Titanio Grey, Luna White ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |