பலாப்பழம் சாப்பிட்ட பிறகு மறந்து கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! பெரும் ஆபத்தை ஏற்படுத்துமாம்
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் வேர்கள், இலைகள், பழங்கள், விதைகள், மரக்கட்டை மற்றும் வடியும் பால் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.
இருப்பினும் இதனை ஒரு சில பொருட்களோடு சேர்த்து சாப்பிட கூடாது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- பலாப்பழம் சாப்பிட்டவுடன், சிலர் இரவில் பால் குடிக்க கூடாது. ஏனெனில் இது உங்கள் ஆரோக்கியத்தை தீங்கு விளைவிக்கும். இது தோல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உங்களுக்கு பருக்கள் வரலாம், அலர்ஜி ஆகலாம். எனவே தவறை செய்யாமல் இருப்பது நல்லது.
- பலாப்பழத்திற்குப் பிறகு தேன் சாப்பிடக்கூடாது, இது உங்கள் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். தேன் மற்றும் பலாப்பழம் இரண்டுமே இனிப்புச்சுவை கொண்டவை. இரண்டையும் ஒன்றாக சேர்த்து உண்பதால் அது எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
- பலாப்பழம் சாப்பிட்ட பிறகு அதை உட்கொண்டால், அது உங்கள் உடலில் அழற்சியை ஏற்படுத்தும். எனவே, பலாவை சுவைத்த பிறகு குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து பப்பாளியை சாப்பிடலாம்.
- பலாவை காயாக சமைத்து சாப்பிடும்போது, வெண்டைக்காயை மட்டும் சாப்பிடவேண்டாம். பலாப்பழத்துடன் வெண்டைக்காயை உட்கொண்டால், சருமப் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தோலில் வெண் திட்டுகள் தோன்றும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.