வெடிக்க தயாராக இருக்கும் எரிமலை! முழு நகரத்தையும் அழிக்கக்கூடியதா? வெளிப்படும் திகிலூட்டும் ஒலிகள்
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிக்க தயாராக உள்ளதாக அதில் இருந்து வெளிப்படும் ஒலிகள் மூலம் தெரிய வந்துள்ளதால், சுற்றியுள்ள பகுதிகளில் பீதி ஏற்பட்டுள்ளது.
பாரிய வெடிப்புக்கு தயாராக உள்ள எரிமலை
ஐரோப்பாவின் ஒரு பகுதியாக உள்ள தீவு தேசம் ஐஸ்லாந்து. இங்கு மொத்தம் 130 எரிமலைகள் உள்ளன.
இந்த நிலையில் Fagradalsfjall எனும் எரிமலை பாரிய வெடிப்புக்கு தயாராக உள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில் இருந்து வெளிப்படும் திகிலூட்டும் ஒலிகளால், எரிமலை வெடித்தால் ஒரு முழு நகரத்தையும் அழிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ImageBank4u/Shutterstock.com
அவசரகால நிலை
மேலும், எரிமலையைச் சுற்றி நில அதிர்வு செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், மக்கள் வெளியேற அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில், The Global Seismographic Network நிலையத்தால் பதிவு செய்யப்பட்ட பல Audio clips, 24 மணிநேரத்தில் நில அதிர்வு செயல்பாடுகளில் இருந்து வந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fagradalsfjall பகுதியைச் சுற்றி செயல்பாடு எவ்வாறு தீவிரமடைந்துள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |