பொது மக்களை தாக்கும் ரஷ்ய 'காட்டுமிராண்டிகள்'., உக்ரைனில் 140 பேர் மரணம்..
உக்ரைனில் 130-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் 'கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான' படையெடுப்பினால் உக்ரைனில் உயிரிழப்புகள் அதிகரித்துவருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்குவதாக ரஷ்யா கூறினாலும், பொதுமக்களின் தளங்களும் தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி Zelensky கூறினார்.
"ரஷ்யர்கள் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் மற்றும் அமைதியான நகரங்களையும் இராணுவ இலக்குகளாக மாற்றுகிறார்கள். இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்கப்படாது" என்று அவர் கூறினார்.
மேலும், ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், இதுவரை குறைந்தது 137 பேர் - வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்துள்ளனர் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். மேலும் 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கார்கிவ் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷ்ய படை ஷெல் தாக்குதல் நடத்தியதில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Anadolu Agency via Getty Images
AFP via Getty Images