பிரச்சாரத்திற்கு நடுவே ராகுல் காந்திக்கு பஜ்ஜி கொடுத்த தொண்டர்! உடனே அவர் செய்த செயல்
அரியானாவில் தீவிர பிரச்சாரத்திற்கு நடுவே ராகுல் காந்திக்கு தொண்டர் ஒருவர் பஜ்ஜி கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
இந்திய மாநிலமான அரியானாவில் வருகிற 5 -ம் திகதி ஒரே கட்டமாக 90 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அங்கு பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலத்த போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அரியானா மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், பகதூர்கர் நகரில் ரோடு ஷோ நடத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்திதீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பிரச்சாரத்திற்கு நடுவே ராகுல் காந்திக்கு தொண்டர்கள் பஜ்ஜி கொடுத்தனர். அப்போது, அதனை எடுத்துக்கொண்ட அவர் பக்கத்தில் இருந்த காவலருக்கும் ஒரு பஜ்ஜி எடுத்து கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Rahul Gandhi ne Bahadurgarh ka Pakoda khaya. What all political stage managers have to do ???#HaryanaElections @RahulGandhi @pranavINC pic.twitter.com/w29NJjinCo
— bhupendra chaubey (@bhupendrachaube) October 1, 2024
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |