ஹாலோவீன் தினத்தில் ஏரியை சுத்தம் செய்யும்போது கிடைத்த சூட்கேஸ்., திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி..
அமெரிக்காவில் ஏரி ஒன்றில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஹாலோவீன் அன்று ஏரியை சுத்தம் செய்யும் திட்டத்தை சில தன்னார்வலர்கள் எடுத்துள்ளனர். சுத்தம் செய்யும் போது, ஒரு சூட் கேஸை குளத்தில் பார்த்துள்ளனர். அதை திறந்தபோது துர்நாற்றம் வீசியது. அதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கப்பட்டபோது சடலம் கிடைத்தது.

தற்காப்புக் கலைப் பயிற்சியின்போது விபரீதம்; Meta சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்கிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை
யாரோ ஒருவர் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஏரியில் வீசபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்துள்ளது.
ஹாலோவீன் அன்று கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாந்தில் உள்ள ஏரியை சுத்தம் செய்யும் போது சூட்கேஸில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கலிபோர்னியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
bay area News Group
நியூயார்க் போஸ்ட் படி, செவ்வாய்கிழமை காலை மெரிட் ஏரியை தன்னார்வலர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அதன் விளிம்பில் ஒரு சூட்கேஸ் மிதப்பதைக் கண்டனர். அதன் பின் வலையை பயன்படுத்தி அதை வெளியே எடுத்தனர். கடைசியில் சூட்கேசில் ஒருவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குறித்த நபர் 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். சூட்கேசை திறந்து பார்த்தபோது துர்நாற்றம் வீசியது. அது அழுகிய நிலையில் இருந்ததாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர். சூட்கேஸைக் கண்டுபிடித்த லேக் மெரிட் இன்ஸ்டிடியூட் தன்னார்வலர்களில் ஒருவரான கெவின் ஷோமோ, சூட்கேஸில் இறந்த உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக கூறினார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஓக்லாண்ட் பொலிஸ் கேப்டன் அலன் யூ தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
body found stuffed inside a suitcase, Lake Merritt in Oakland, California, Halloween