உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்க ஜப்பானியர்கள் தயார்! தூதரகம் தகவல்
உக்ரைனில் ரஷ்யாவை எதிர்கொள்ள ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 7வது போர் தொடுத்து வரும் ரஷ்யா படைகள், இன்று கெர்சன் நகரத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், ஜப்பானில் இருந்து சுமார் 70 தன்னார்வலர்கள் உக்ரைனின் வெளிநாட்டு படையணியில் சேர தயாராக உள்ளனர் என டோக்கியோவில் உள்ள உக்ரைன் தூதர வட்டாரத்தை மேற்கொள் காட்டி ஜப்பானின் Mainichi செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இந்த 70 பேரில் 50 பேர் ஜப்பான் பாதுகாப்பு படையில் சேவையாற்றி முன்னாள் வீரர்கள் என வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமைதி மற்றும் ஜனநாயகத்தின் நண்பர்களான வெளிநாட்டினரை தனது நாட்டிற்குச் வந்த ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராகப் போராடுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை அடுத்து உக்ரைனின் வெளிநாட்டு படையணியில் ஜப்பானில் இருந்து சுமார் 70 தன்னார்வலர்கள் சேர தயாராக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.