Volvoவின் முதல் எலக்ட்ரிக் மினிவேன் Em90.! சிங்கிள் சார்ஜில் 738 கிமீ ரேஞ்சு..
சிங்கிள் சார்ஜில் 738 கிமீ ரேஞ்சு தரும் Volvoவின் முதல் மின்சார சொகுசு மினிவேன் வெளியாகியுள்ளது.
Volvo EM90 என்பது Zeekr 09 இயங்குதளத்தில் உள்ள ஒரு நவீன மின்சார மினிவேன் ஆகும். வால்வோவின் புதிய மின்சார மினிவேன், எஸ்யூவிகளுக்குப் போட்டியாக உயர்தர அம்சங்கள் மற்றும் வடிவமைப்புடன் உலக சந்தையில் நுழைந்துள்ளது.
பிரபல ஸ்வீடிஷ் கார் உற்பத்தியாளரான Volvo Cars அதன் சொகுசு கார்களுக்கு பெயர்பெற்ற நிறுவனமாகும். இப்போது, Volvo அதன் முதல் மின்சார மினிவேன் EM90 MPV சொகுசு காரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த மினிவேன் மாடல் முழு மின்சார சொகுசு MPVயாக வருகிறது.
வோல்வோ இந்த மின்சார மினிவேனை முதன்மையாக சீன சந்தைக்காக உருவாக்கியுள்ளது. இந்த மினி வேன் வரும் நாட்களில் மற்ற நாடுகளில் கிடைக்கும்.
இந்த எலக்ட்ரிக் வேன் வோல்வோவின் அளவிடக்கூடிய SEA இயங்குதளத்தை (Sustainable Experience Architecture platform) அடிப்படையாகக் கொண்டது. வால்வோ EM90 மாடல் கார் EX90 எலக்ட்ரிக் SUV போன்ற வடிவமைப்புடன் வருகிறது. வோல்வோ EM90 உயர்தர அம்சங்களுடன் நிரம்பிய 'ஸ்காண்டிநேவியன் லிவிங் ரூம் ஆன் வீல்' போன்றது என்று நிறுவனம் கூறுகிறது.
வால்வோ EM90 பரிமாணங்களைப் பொறுத்தவரை, இது 5,206 மிமீ நீளம், 2,024 மிமீ அகலம், 1,859 மிமீ உயரம் மற்றும் 3,205 மிமீ வீல்பேஸைக் கொண்டுள்ளது. இந்த மினிவேனில் மூன்று வரிசை இருக்கைகளிலும் ஆறு பேர் வரை அமர முடியும்.
பின் இருக்கைகளுக்கு ஸ்லைடிங் கதவுகளை வழங்கும் முதல் வால்வோ கார் இதுவாகும். இது வோல்வோவின் சீன பங்குதாரரால் உருவாக்கப்பட்ட Zeekr 09-ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த புதிய சொகுசு கார், தோரின் ஹேமர் எல்இடி ஹெட்லைட்கள், டெயில்லைட்கள் போன்ற வால்வோவின் சில தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களுடன் வருகிறது. முன்பக்கத்தில் முழு பிரைட்னஸ் லோகோவுடன் வரும் முதல் வால்வோ கார் இதுவாகும்.
வால்வோ EM90 சிறிய சொகுசு வீடு
இந்த எலெக்ட்ரிக் இஎம்90 கார் வெளியில் பார்ப்பதற்கு சொகுசு வீடு போல் தெரிகிறது. இரண்டாவது வரிசையில் massage functionality, seat ventilation, heating features, built-in table மற்றும் கப் ஹோல்டர்கள் கொண்ட லவுஞ்ச் இருக்கைகள் உள்ளன. கூடுதலாக, இரண்டாவது வரிசை லவுஞ்ச் இருக்கைகள் zero-gravity மெத்தைகளைக் கொண்டுள்ளன, ஏழு அடுக்கு கட்டுமானத்துடன் 120 மிமீக்கு மேல் தடிமன் கொண்ட தணிப்பு அடுக்கு அடங்கும். ஒரு ஸ்லைடிங் பின் கதவு மற்றும் உயரமான ஸ்லைடிங் இரண்டாவது வரிசை இருக்கைகள் மூன்றாவது வரிசையை எளிதாக அணுக உதவும்.
பல கவர்ச்சிகரமான அம்சங்கள்
EM90 கார் தயாரிப்பாளரால் 'Scandinavian living room on wheels' என்று விவரிக்கப்படுகிறது. ஏனெனில் வால்வோ சொகுசு காரை பணியிடமாகவோ அல்லது சந்திப்பு அறையாகவோ பயன்படுத்தலாம் என்று நிறுவனம் கூறுகிறது. முன் இருக்கையில் 15.4 அங்குல தொடுதிரை, பின் இருக்கையில் அமர்பவர்களுக்கு சற்று பாரிய 15.6 இன்ச் திரையை கூரையிலிருந்து இறக்கிவிடலாம். Bowers and Wilkins மொத்தம் 21 ஸ்பீக்கர்கள் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் இசையைக் கேட்பதற்கும் முதல் தர ஒலி அனுபவத்தை வழங்கும். EM90-ல் பனோரமிக் சன்ரூஃப் உள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 738கிமீ வரை மைலேஜ் (Range)
EM90 அதிகபட்சமாக 272hp ஆற்றலை வெளிப்படுத்தும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. வால்வோ கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்ட 8.3 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. பேட்டரி 116 கிலோவாட் சேமிப்பு திறன் கொண்டது. சைனா சிஎல்டிசி சோதனைச் சுழற்சியின்படி, வால்வோ சொகுசு கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 738 கி.மீ. வேகமான சார்ஜிங் மூலம் கார் பேட்டரியை 10 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 30 நிமிடங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Volvo unveils first-ever electric minivan EM90 MPV, Volvo, Electric Car