வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: சஜித் தரப்பு குற்றச்சாட்டு!
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இது தொடர்பாக கூடுதல் அவசியம் ஏற்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று(22.09.2024) நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, சில வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் தங்களுடைய கட்சி முகவர்கள் இல்லாத நேரத்தில் இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்குமாறு தனது கட்சி முகவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இருப்பினும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் தன்னுடைய கட்சி முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |