கோடீஸ்வரர்களிடம் இல்லாத விலையுயர்ந்த காரை வைத்திருக்கும் இந்திய தொழிலதிபர்! யார் இவர்?
பெரும் தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கௌதம் சிங்கானியா, ரத்தன் டாடா போன்றவர்களிடம் இல்லாத விலையுயர்ந்த காரை கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வைத்துள்ளார்.
யார் இவர்?
இந்திய மாநிலம், கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வி.எஸ்.ரெட்டி. இவர், தி புரோட்டீன் மேன் ஆஃப் இந்தியா என்று பிரபலமாக அறியப்படுபவரும், பிரிட்டிஷ் பயோலாஜிக்கல் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவரிடம் தான் கோடீஸ்வரர்களிடம் இல்லாத விலையுயர்ந்த கார் உள்ளது.
கௌதம் சிங்கானியா வைத்திருக்கும் பெராரி மற்றும் முகேஷ் அம்பானி வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஆகிய கார்களை விட இவர் வைத்திருக்கும் காரின் மதிப்பானது அதிகம். ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு இருப்பது போல, இங்கிலாந்தை சேர்ந்த பென்ட்லி மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார்களும் பெயர் பெற்றது.
இந்த நிறுவனத்தின் காரின் ஆரம்ப விலையே ரூ.5 கோடியில் இருந்து தான் தொடங்குகிறது. இந்த நிறுவனத்தின் ரூ.14.5 கோடி விலையுள்ள பென்ட்லி முல்சேன் EWB Centenary எடிசன் கார் தான் இந்தியாவிலேயே விலையுயர்ந்த காராக கருதப்படுகிறது. இந்த காரை தான் கர்நாடக தொழிலதிபர் வி.எஸ்.ரெட்டி வைத்துள்ளார்.
பிரிட்டிஷ் பயோலாஜிக்கல் நிறுவனம்
இவர், அனைத்து வயதினருக்கும் மலிவான விலையில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரிட்டிஷ் பயோலாஜிக்கல் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இந்நிறுவனம், இந்தியாவில் ஊட்டச்சத்து நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக உள்ளது. 52 தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வி.எஸ்.ரெட்டி பெற்றுள்ளார்.
இவர், தன்னுடைய தொழிலில் மும்முரமாக இருந்தாலும் அனைத்து வகை பிராண்ட் கார்களையும் சேகரித்து வைப்பதே இவருடைய கனவாக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |