24 வயதில் 1000 கோடிகளுக்கு சொந்தக்காரர்! தேவிகா சரஃப் வெற்றிக் கதை
தேவிகா சரஃபின் தொழில்முறை பயணம் லட்சியத்திற்கும், விடாமுயற்சிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இளம் வயதில் வெற்றி
தேவிகா சரஃப்(Devita Saraf) 24 வயதிலேயே வீடுகளில் பிரபலமான பெயராக மாறிய Vu Technologies (பின்னர் Vu குழுமமாக மாறியது) என்ற நிறுவனத்தை நிறுவினார்.
இன்று, Vu நிறுவனம் 3 மில்லியனுக்கும் அதிகமான தொலைக்காட்சிகளை விற்பனை செய்து, மேலும் ரூ.1,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
மேலும் உலகளவில் ஒரு முன்னணி இந்திய தொலைக்காட்சி பிராண்டாக தனது நிலையை உறுதிப்படுத்தி கொண்டுள்ளது.
குடும்ப பின்னணி மற்றும் கல்வி
மும்பையில் தொழில் சார்ந்த குடும்பத்தில் பிறந்த சரஃப், தொழில் துறையில் வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை பெற்றார்.
அவரது தந்தை Zenith Computers நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
தேவிகா சரஃப் அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர், இளவயதிலேயே தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.
21 வயதில் Zenith Computers நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் இயக்குனர் பதவிக்கு உயர்ந்தார்.
சாதனைகளின் தொகுப்பு
தொழில் துறையில் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல், தேவிகா சரஃப் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
அவர் 40 வயதிற்குட்பட்ட இந்தியாவின் செல்ஃப்-மேட் பெண்மணி (ஹுருன் அறிக்கை 2020), 50 மிகவும் செல்வாக்கு மிக்க பெண்கள் (ஃபார்ச்சூன் இந்தியா) மற்றும் "இந்தியாவின் மாடல் சிஇஓ" (ஃபோர்ப்ஸ்) என அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தேவிகா சரஃப், ஃபேஷன் மற்றும் கலை ஆகிய துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |