ராஜஸ்தானுக்கு வாணவேடிக்கை காட்டிய இருவர்! 220 ரன் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்
2025 ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 220 ஓட்டங்கள் வெற்றி இலக்காக ராஜஸ்தன் ராயல்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
வதேரா ருத்ர தாண்டவம்
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. பிரியான்ஸ் ஆர்யா (9), மிட்செல் ஓவன் (0) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (21) ஆகியோர் வரிசையாக ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் என தடுமாறியது.
அப்போது களமிறங்கிய நேஹால் வதேரா ருத்ர தாண்டவம் ஆடினார். அவருக்கு பக்க பலமாக ஷ்ரேயாஸ் ஐயரும் அதிரடி காட்ட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
ஷ்ரேயாஸ் 30 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பராக் ஓவரில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷஷாங்க் சிங்கும் வாணவேடிக்கை காட்டினார்.
துவம்சம் செய்த ஷஷாங்க் சிங்
அரைசதம் கடந்த நேஹால் வதேரா (Nehal Wadhera) 37 பந்துகளில் 70 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
கடைசிவரை களத்தில் நின்ற ஷஷாங்க் சிங் (Shashank Singh) 30 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் விளாசினார்.
அஸ்மதுல்லா ஓமர்சாய் 9 பந்தில் 21 ஓட்டங்கள் எடுக்க, பஞ்சாப் அணி 219 ஓட்டங்கள் குவித்தது. துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |