போருக்கு ரஷ்யா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! புடினுக்கு வாக்னர் தலைவர் அறிவுரை
உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் புடினிடம் தெரிவித்துள்ளார்.
வருட கணக்கில் தொடரும் போர்
உக்ரைன் மீதான ராணுவ தாக்குதலில் கீவ்வை கைப்பற்றுவதே ரஷ்யாவின் முக்கிய குறிக்கோளாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் போர் தொடங்கி ஒரு வருடத்தை கடந்து இருக்கும் நிலையில், உக்ரைனிய பிரதேசத்தில் ரஷ்யா சுமார் 51,000 சதுர மைல் பகுதி கைப்பற்றியுள்ளது.
getty
இது உக்ரைனிய பிரதேசத்தில் 20% பகுதியாகும். ஆனால், வரும் கோடை காலத்தில் உக்ரைன் மிகப்பெரிய எதிர்ப்பு தாக்குதலை திட்டமிட்டு இருப்பதால் கைப்பற்றிய பகுதிகளில் இன்னும் அதிகமான நிலத்தை இழக்கும் நிலைக்கு ரஷ்யா வந்துள்ளது.
புடின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
இந்நிலையில் ரஷ்யா தனது சிறப்பு இராணுவ நடவடிக்கையின் முடிவை அறிவிப்பதே சிறந்த வழி என ரஷ்யாவின் சார்பாக உக்ரைனில் சண்டையிடும் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின்(Yevgeny Prigozhin) தெரிவித்துள்ளார்.
getty
மேலும் இது தொடர்பாக கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி ப்ரிகோஜின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் முடிவை புடின் அறிவிக்க வேண்டும் என்றும், "ரஷ்யா திட்டமிட்ட முடிவுகளை அடைந்துவிட்டதாக அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.
getty
மேலும் நாங்கள் உண்மையில் இலக்கை அடைந்துள்ளோம். உக்ரைனின் ஆயுதப் படைகளின் ஏராளமான வீரர்களை நாங்கள் கொன்றுள்ளோம், மேலும் எங்கள் பணி முடிந்து விட்டது என்று தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், வாக்னர் போராளிகளுக்கு வெடிமருந்துகளை பெற்றுத் தர ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தவறி விட்டதாகவும், விமானப் போக்குவரத்திற்கும் உதவவில்லை என்றும் ப்ரிகோஜின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.